Tuesday 9 June 2015

சாதம் வடிச்ச கஞ்சி தண்ணிய குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்....!


சாதம் வடிச்ச கஞ்சி தண்ணிய குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்....!

இன்றைய காலத்தில் பிரஸர் குக்கர், எலக்ட்ரிக் குக்கர் வந்துவிட்டதால், பலரும் அக்காலத்தில் சாதம் வடித்து சாப்பிடும் முறையை மறந்துவிட்டனர். ஆனால் சாதத்தை குக்கரில் சமைத்து சாப்பிடுவதை விட, வடித்த சாதம் சாப்பிடுவது தான் நல்லது.
அதுமட்டுமின்றி அப்படி வடித்த சாதத்தின் போது வடிகட்டிய நீரில் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. சொல்லப்போனால் சாதத்தை விட, அந்த நீரில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது எனலாம்.
அக்காலத்தில் நம் முன்னோர் அரிசி சாதத்தை சாப்பிட்டும் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு, அவர்கள் கடுமையாக உழைத்தது மட்டுமின்றி, இந்த சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை குடித்து வந்ததும் என்று கூட சொல்லாம்.
சாதம் வடிச்ச கஞ்சி தண்ணிய குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!
எனர்ஜி :-
சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்தால், உடலின் ஆற்றல் தக்க வைக்கப்படும். அதனால் தான் விவசாயிகள் காலையில் விவசாயம் செய்ய தோட்டத்திற்கு செல்லும் முன் வடித்த கஞ்சி நீரை குடித்து வருகிறார்கள். இதனால் அவர்கள் நன்கு எனர்ஜியுடன் நீண்ட நேரம் வெயிலில் வேலை செய்ய முடிகிறது
இரைப்பைக் குடல் அழற்சி :-
சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் இரைப்பைக் குடல் அழற்சியைத் தடுக்கும். ஆகவே அவ்வப்போது சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்து வாருங்கள்.
உடல் வெப்பத்தைத் தணிக்கும் :-
சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் உடலின் வெப்பநிலையை சீராக பராமரிக்க உதவும். அதனால் தான் கோடையில் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடிக்க சொல்வார்கள் நம் முன்னோர்கள்.
புற்றுநோயைத் தடுக்கும் :-
வடிச்ச கஞ்சி தண்ணீரை ஒருசில புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கும் திறன் கொண்டவை. ஆகவே புற்றுநோய் உள்ளவர்கள் இதனை குடித்து வந்தால், புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கலாம்.
மலச்சிக்கல் :-
சாதம் வடித்த கஞ்சித் தண்ணீர் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். எப்போது நீங்கள் மலச்சிக்கலால் அவஸ்தைப்படுகிறீர்களோ, அப்போது ஒரு டம்ளர் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
கார்போஹைட்ரேட் :-
சாதம் வடித்த கஞ்சி தண்ணீரில் கார்போஹைட்ரேட் வளமையாக நிறைந்துள்ளது. ஆகவே உடல் எடையை அதிகரிக்க நினைப்போர் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை தினமும் குடித்து வந்தால், நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.
சூரியனிடமிருந்து நல்ல பாதுகாப்பு தரும் :-
சாதம் வடித்த கஞ்சி தண்ணீரில் உள்ள ஓரிசனோல் என்னும் பொருள், சூரியனின் புறஊதாக் கதிர்களில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும். அதுவும் சருமத்தின் உட்பகுதியிலும் சரி, வெளிப்பகுதியிலும் சரி.



Monday 8 June 2015

அடிப்பட்டால் வரும் இரத்தக் கசிவை கட்டுப்படுத்தும் வீட்டு மருந்துவம் !!!


அடிப்பட்டால் வரும் இரத்தக் கசிவை கட்டுப்படுத்தும் வீட்டு மருந்துவம் !!!

உடலில் சிறு அடிப்பட்டால் வரும் இரத்தத்தை பார்த்தால் சிலருக்கு மயக்கம் வரும். ஏன் சிலர் உயிரே போனது போல் பயப்படுவார்கள். அதிலும் குழந்தைகள் தான் இத்தகைய சிறு காயங்களால் இரத்தம் வரும் அளவிற்கு அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
அப்போது மருத்துவரிடம் அழைத்து செல்வதற்கு பதிலாக, நம் முன்னோர்களின் வைத்தியமான சில வீட்டு மருந்துகள் இருக்கின்றன. மேலும் சமையல் செய்யும் போது காய்கறிகளை வெட்டும் போது, கவனக்குறைவால் விரல்களை தெரியாமல் வெட்டிக் கொள்வோம். இத்தகைய நேரங்களில் எல்லாம், என்ன செய்வது என்று பதட்டப்படாமல், பாட்டி வைத்தியமான வீட்டு கிச்சனில் இருக்கும் பொருட்களை வைத்து சரிசெய்யலாம்.
* அடிப்பட்டு இரத்தம் வரும் போது, உடனே அந்த இடத்தை கழுவி விட்டு, வீட்டில் இருக்கும் காப்பி பொடியை, அந்த காயத்தின் மேல் வைக்க வேண்டும். இதனால் காப்பி பொடி இரத்தத்தை உறைய செய்யும்.
* இரத்த வடிதலை சரிசெய்ய மைதா அல்லது கோதுமை மாவை வைத்தால், அடிப்பட்ட இடத்தில் இருந்து இரத்தம் வடிதல் நின்றுவிடும். இது ஒரு சிறந்த ஹோம் ட்ரீட்மெண்ட்.
* இந்த முறை சற்று வித்தியாசமானது. ஆனால் உண்மையானது. எலக்ட்ரிக்கல் டேப் வைத்து இரத்த வடிதலை தடுக்கலாம். எப்படியெனில், எலக்ட்ரிக்கல் டேப்பை காயம் ஏற்பட்ட இடத்திற்கு அருகில் இறுக்கமாக சிறிது நேரம் கட்ட வேண்டும். இதனால் அந்த இடத்தில் இரத்த ஓட்டம் தடைபடும்.
* சிறுவயதாக இருக்கும் போது, ஏதேனும் அடிப்பட்டால், வீட்டில் இருக்கும் அம்மா உப்பை அந்த இடத்தில் வைப்பார்கள். ஏனெனில் உப்பு மற்றும் உப்பு நீர், காயங்களை மட்டும் சரிசெய்யாமல், இரத்த வடிதலையும் தடுக்கும். ஆகவே மேற்கூறியவாறு செய்து வந்தால், இரத்தக் கசிவு நீங்கிவிடும். 

Tuesday 2 June 2015

ஆரோக்கியமாக வாழ...



ஆரோக்கியமாக வாழ...
* தூங்கப் போவதற்கு முன், தினமும் கை, கால்கள், முகத்தை கழுவுங்கள்; பற்களையும் சுத்தம் செய்யுங்கள். சிறிது நேரம் வாய்க்குள் தண்ணீரை வைத்து, நன்றாக வாயை கொப்பளியுங்கள்.
* தினமும் நன்றாக தூங்குங்கள். மாதத்தில் ஒரு முறையாவது கண்ணாடி முன் நின்று, உங்கள் உடலை பாருங்கள். அப்படி பார்த்தால், உடலில் ஏற்படும் சுருக்கங்கள், படைகள் போன்றவைகளை கண்டறியலாம்.
* உணவில் பச்சை காய்கறிகளையும், பழ வகைகளையும் தேவையான அளவு சேருங்கள்.
* முடிந்த அளவு வாகன பயணங்களை மேற்கொள்ளாதீர்கள்; அதிகமான தூரம் நடந்து செல்ல முயற்சி செய்யுங்கள்.
* தினமும் குறைந்தது, 50 முறை உட்கார்ந்து எழுவது நல்லது. அப்படி செய்தால் இடுப்பு அழகுப்படும்; தொந்தியும், வயிறும் குறையும்.
* குளிக்கும் போது எப்போதும் குதிகாலையும், கால் விரல்களையும் தேய்த்து கழுவுங்கள்.
* படுக்கைக்கு அருகிலும், வேலை பார்க்கும் இடத்துக்கு அருகிலும், ஒரு போத்தல் தண்ணீர் எடுத்து வைத்து கொள்ளுங்கள். தேவைப்படும் போதெல்லாம் தண்ணீர் குடியுங்கள்.
* முளைவிட்ட கடலை, சிறுபயறு போன்றவைகளை காலை உணவில் சேர்க்க வேண்டும்.
* கை நகங்களை வெட்டி சுத்தம் செய்வதை, கடமையாக கொள்ளவும்.
* உறங்கும் போது பட்டு துணிகளை அணியுங்கள்.
* அதிக சூடு, அதிக குளிர் உணவுகள் பற்களுக்கு கேடு பயக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
* இரவு இனிப்பு பலகாரங்கள் சாப்பிட்டால், மறக்காமல் பற்களை சுத்தப்படுத்தி விடுங்கள்.
* இரவில் அதிக நேரம் விழித்திருப்பதும், பகலில் தூக்கம் போடுவதும் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல.
* கொழுப்பு நிறைந்த எண்ணெயை உணவில் சேர்க்காதீர்கள்; அது, உடல் அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் கேடு பயக்கும்.
* தினமும் காலையில் தேநீரோ, குழம்பியோ( காபி)குடிப்பதற்கு முன், ஒரு பழம் சாப்பிடுவது நல்லது.
* தினமும் காலை யில், 10 நிமிடமாவது உடற்பயிற்சி செய்யுங்கள்

எந்த நோய் இருந்தாலும் கவலை வேண்டாம் கடவுள் மந்திரம் இயற்கை மருத்துவத்தால் சரிசெய்துவிடலாம் 8056156496





உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி..

உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி..
நண்பர்களே இந்த செய்தியை நீங்கள் படித்தது மட்டுமின்றி மற்ற (குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால் பாதிக்க பட்டவர்களும்) பயன் பெற இந்த செய்தியை பகிர்ந்து உதவுங்கள்.
தற்போது நிலவி வரும் பருவ நிலா மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம்(வெப்பம்) ஏற்படுகிறது,
இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது, இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது,
இதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வாயிற்று வலி, உடல் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் நிகழ்வுகள் நிகழ்கிறது, இதனை சரி செய்ய நம் சித்த பெருமைக்க அன்றைய காலகட்டத்திலேயே ஒரு எளிய மற்றும் ரகசியமான வழியை உங்களுக்காக கொடுக்கிறோம்.


தேவையான பொருள்கள் :
1.நல்லெண்ணெய்
2.பூண்டு
3.மிளகு


செய்முறை:
நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும், எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி, சூடு ஆறினதும் எண்ணையை காலின்(இரு கால்) பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும், 2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும், இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும், 2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது, சளி ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம், மிகுந்த மன அழுத்தம் , உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள்.
இதன் வாசனை தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கும்.
அந்த காலத்தில் சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும் என்று வந்தால் மேல் குறிப்பிட்ட மருத்துவ முறையையே சொல்வார்களாம்.
ஏனெனில் இதனை செய்வதன் மூலம் ஆண்களின் விந்து விருத்தி அடைந்து மூன்று மாதத்தில் குழந்தை பிறக்குமாம், இதனை IT (18 வயதுக்கு மேல்) துறையில் வேலை செய்பவர்கள் தினமும் காலை குளிக்க போகும் முன் 1 நிமிடத்திற்கு எண்ணையை தடவினால் மன அழுத்தம் நீங்கும். மேலும் சிறியவர்களாக இருந்தால் வாரத்தில் இருமுறை இதனை செய்யலாம்.
நண்பர்களே இந்த செய்தியை நீங்கள் படித்தது மட்டுமின்றி மற்ற (குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால் பாதிக்க பட்டவர்களும்) பயன் பெற இந்த செய்தியை பகிர்ந்து மகிழுங்கள்.





Sunday 31 May 2015

30 வகை வெரைட்டி ரைஸ்!

30 வகை வெரைட்டி ரைஸ்!
சோளம் மசாலா ரைஸ்

தேவையானவை: பாஸ்மதி அரிசி - ஒரு கப், உதிர்த்த சோளம் - ஒரு கப், பச்சைப் பட்டாணி - ஒரு கப், முந்திரி துண்டு - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன், கரம்மசாலா தூள் - அரை டீஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எலுமிச்சை சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் அல்லது எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், மல்லித்தழை - சிறிது, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெயை ஊற்றி, காய்ந்ததும் முந்திரியை நன்றாக வறுத்துக் கொள்ளவும். அதே எண்ணெயில் கடுகு, சீரகத்தை வெடிக்க விடவும். பிறகு, சோளம், பட்டாணி, அரிசி, மிளகாய்த்தூள், சாம்பார் பொடி, கரம்மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். நன்கு வதங்கியதும், 5 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவிடவும். 3 விசில் வந்ததும், வெந்த சாத கலவையைக் கடாயில் கொட்டி எலுமிச்சை சாறு, வறுத்த முந்திரி, மல்லித்தழை, சர்க்கரை சேர்த்து 2 நிமிடம் கிளறி, தயிருடன் பரிமாறவும்.
காராமணி ரைஸ்
தேவையானவை: அரிசி - ஒன்றரை கப், காராமணி - அரை கப், வெங்காயம், தக்காளி - தலா 1 (பொடியாக நறுக்கவும்), சாம்பார் பொடி - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிது, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காராமணியை ஊறவைத்து குக்கரில் வேக விட்டு, வடிக்கட்டி ஆறவிடவும். சாதத்தை உதிரியாக வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ளவும். அதில், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலையுடன் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். வறுபட்டதும் சாம்பார் பொடி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், வேகவைத்த காராமணி, உப்பு, எலுமிச்சை சாறு, தக்காளித் துண்டுகளைச் சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கவும். வடித்து வைத்துள்ள சாதத்தைப் போட்டு மசாலா நன்கு பரவும்படி கிளறிக் கொள்ளவும். பிறகு மூடி 2 நிமிடம் மிதமான தீயில் சமைக்கவும். மல்லித்தழை தூவி பரிமாறவும்
நெய் சாதம்
தேவையானவை: பாஸ்மதி அரிசி - ஒரு கப், வெங்காயம் - 2, பச்சைமிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்), சீரகம் - அரை டீஸ்பூன், ஜாதிக்காய் பொடி (விருப்பப்பட்டால்) - அரை டீஸ்பூன், பூண்டு, கிராம்பு - தலா 1 (நசுக்கிக் கொள்ளவும்), இஞ்சி - அரை துண்டு (பொடியாக நறுக்கவும்), முந்திரி - சிறிது, நெய் - 3 டேபிள்ஸ்பூன், எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன், மல்லித்தழை - சிறிது, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் நெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு வறுத்து ஜாதிக்காய் பொடி, இஞ்சி, பூண்டு, முந்திரி, கிராம்பு போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும். பிறகு வெங்காயம், பச்சைமிளகாய் சேர்க்கவும். அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைத்து, தண்ணீரை வடித்து, வதக்கியவற்றுடன் போட்டு, 2 நிமிடம் கிளறவும். பிறகு அதில் 2 கப் தண்ணீர் சேர்த்து உதிரியாக வடித்துக் கொள்ளவும். உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து ஆறியதும் மல்லித்தழை தூவவும். வெங்காய பச்சடி அல்லது தயிர் பச்சடி தொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும்.
பீன்ஸ் புலாவ்
தேவையானவை: அரிசி - ஒரு கப், பீன்ஸ் - அரை கப் (பொடியாக நறுக்கி வேகவைத்துக் கொள்ளவும்), உடைத்த முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த திராட்சை - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சைமிளகாய் - 4 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), மல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், வெங்காயம் - 2, (மெல்லிய துண்டுகளாக நறுக்கவும்) சீரகம் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கிராம்பு - 2, பிரிஞ்சி இலை - 2, ஏலக்காய் - 2, பட்டை - ஒரு துண்டு, மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் அல்லது எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், கரம்மசாலா தூள் - அரை டீஸ்பூன், எலுமிச்சை சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், தண்ணீர் - 6 கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியைக் கழுவி உப்புத் தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயத்தை மொறு மொறுவென்று வறுத்து, எண்ணெயை வடித்து விட்டு தனியாக வைக்கவும். பிறகு முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வறுத்து வைக்கவும். மீதி எண்ணெயில் சீரகத்தைப் போட்டு வறுக்கவும். பெருங்காயத்தூள், கிராம்பு, பிரிஞ்சி இலை, ஏலக்காய், பட்டை, மிளகு எல்லாவற்றையும் சேர்த்து வறுக்கவும். அதனுடன், பச்சைமிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு அரிசியில் உள்ள தண்ணீரை வடித்து, நன்றாகப் பரவும்படி கிளறி, திராட்சையை சேர்க்கவும். பிறகு அதில் 6 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவிடவும். முக்கால் பங்கு வெந்ததுமே தீயைக் குறைத்து மூடியால் மூடி சமைக்கவும். தேவைப்பட்டால், தண்ணீர் சேர்க்கலாம். மூடியை எடுத்துவிட்டு பீன்ஸ், வறுத்த முந்திரி துண்டு, வதக்கிய வெங்காயம் (அலங்கரிக்க சிறிது தனியாக எடுத்து வைக்கவும்), கரம்மசாலா தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து லேசாக கிளறவும். மல்லித்தழை, வெங்காயத்தை தூவி பரிமாறவும்.
குடமிளகாய் புலாவ்
தேவையானவை: அரிசி - ஒரு கப், குடமிளகாய் - 2, பஜ்ஜி மிளகாய் - 1, வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), மல்லித்தழை - கால் கப், சீரகம் - கால் டீஸ்பூன், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், சீஸ் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சாதத்தை உதிரியாக வடித்து ஆறவிடவும். தேவையான அளவு உப்பை கலந்து கொள்ளவும். குடமிளகாய், பஜ்ஜிமிளகாயைத் துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், மிளகுத்தூள் போட்டு வறுக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், பஜ்ஜி மிளகாய் துண்டுகளை சேர்த்து 3 நிமிடம் வதக்கிக் கொள்ளவும். குடமிளகாய் துண்டுகளை சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கவும். காய்கறி கலவை ரொம்பவும் குழைந்து விடாமல் பார்த்துக் கொள்ளவும். ஆறிய சாதத்தை காய்கறி கலவையுடன் சேர்த்து கிளறவும். மல்லித்தழை தூவி, சாப்பிடுவதற்கு முன்பு சீஸ் துருவலை சேர்த்து பரிமாறவும்.
பூண்டு-மிளகாய் சாதம்
தேவையானவை: பச்சைமிளகாய் - 6, பூண்டு பல் - 2 டேபிள்ஸ்பூன், அரிசி - ஒரு கப், பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, வெங்காயம் - கால் கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சாதத்தை உதிரியாக வடித்து ஆறவைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். சிறிது வதங்கியதும் கேரட், பீன்ஸ், பட்டாணி சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இதனிடையே, பூண்டு, பச்சைமிளகாயை விழுதாக அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதுதை வதங்கி கொண்டிருக்கும் காய்கறி கலவையில் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கவும். ஆறவைத்துள்ள சாதம், உப்பு சேர்த்து கிளறி சூடாகப் பரிமாறவும்.
புதினா சாதம்
தேவையானவை: பாஸ்மதி அரிசி - ஒரு கப், எண்ணெய் அல்லது நெய் - ஒரு டேபிள் ஸ்பூன், மிளகு - 2 டீஸ்பூன், கிராம்பு - 2, இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன், வெங்காயம் - 1 (நறுக்கிக் கொள்ளவும்), பொடியாக நறுக்கிய புதினா - அரை கப், பச்சைமிளகாய் - 3 (கீறிக் கொள்ளவும்), உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை உதிரியாக வடித்து ஆறவைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இஞ்சி - பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். மிளகு கிராம்பு, பச்சைமிளகாய் சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கி, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். புதினா இலைகளைப் போட்டு வதக்கி, ஆற வைத்துள்ள சாதம், உப்பு சேர்த்து கிளறி சூடாகப் பரிமாறவும்.
கேரட்-குடமிளகாய் சாதம்
தேவையானவை: குடமிளகாய் - 2, கேரட் - 1 (மீடியம் சைஸ்), எலுமிச்சை சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், அரிசி - ஒரு கப், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், தனியா - 3 டீஸ்பூன், கடலைப்பருப்பு -- 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, நெய் அல்லது எண்ணெய் - ஒரு டீஸ்பூன், மல்லித்தழை - சிறிது, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை உதிரியாக வடித்து ஆறவைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய கேரட், குடமிளகாயைச் சேர்த்து வதக்கிக் கொள்ளவும் (காய்கறிகளை அதிக நேரம் வதக்க வேண்டாம்.. குழைந்து விடும்). தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இதனுடன், வதக்கிய காய்கறிகள், மஞ்சள்தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி, ஆற வைத்த சாதத்துடன் சேர்த்து உப்பு, எலுமிச்சை சாறு கலந்து மல்லித்தழை தூவி பரிமாறவும்.
கொண்டைக்கடலை சாதம்
தேவையானவை: அரிசி - ஒரு கப், தண்ணீர் - 3 கப், வெள்ளைக் கொண்டைக்கடலை - கால் கப், எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய் - 1 அல்லது 2 (பொடியாக நறுக்கவும்), கடுகு - அரை டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4 அல்லது 6, கறிவேப்பிலை - சிறிது, கடலைப்பருப்பு - சிறிது, வறுத்த முந்திரி துண்டு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: முந்தைய நாள் இரவே கொண்டைக்கடலையை ஊறவைத்து மறுநாள் வேகவைக்கவும். அரிசியை உதிரியாக வடித்துக் கொள்ளவும். தனியா, வெந்தயம், காய்ந்த மிளகாயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகைப் போட்டு, வெடித்ததும் சீரகம், கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து வறுத்துக் கொள்ளவும். நறுக்கி வைத்துள்ள பச்சைமிளகாயை சேர்க்கவும். வேக வைத்துள்ள கொண்டக்கடலை, வறுத்து அரைத்த பொடி, வறுத்த முந்திரி, எலுமிச்சை சாறு, தேவையான உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கி, ஆற வைத்துள்ள சாதத்தின் மீது கொட்டி நன்றாகக் கலந்து பரிமாறவும்.
அவல் வெஜ் புலாவ்
தேவையானவை: நறுக்கிய பீன்ஸ், கேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு - அரை கப், வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), கெட்டி அவல் - 2 கப், தக்காளி - 2 (அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்), தேங்காய் பால் - அரை கப், கரம்மலாசா தூள் - அரை டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித்தழை, மஞ்சள்தூள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தக்காளி சாறுடன், தேங்காய் பால் கலந்து அதில் அவலைப் போட்டு அரை மணி நேரம் ஊறவிடவும் (அவல் மூழ்கும் அளவுக்கு தக்காளி சாறு, தேங்காய் பால் கலவையை விட்டால் போதும்). கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு வறுத்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் காய்கறித் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். காய்கறிக் கலவை வதங்கியதும், ஊறிய அவலை சேர்த்து உப்பு, மஞ்சள்தூள், மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து 2 நிமிடம் கிளறி மல்லித்தழை, கறிவேப்பிலை தூவி பரிமாறவும். வித்தியாசமான சுவையில் வெரைட்டியான புலாவ் ரெடி!
ஸ்வீட் ரைஸ்
தேவையானவை: பாஸ்மதி அரிசி - ஒரு கப், குங்குமப்பூ - சிறிது, சர்க்கரை - ஒரு கப், முந்திரி, பிஸ்தா, பாதாம், திராட்சை - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், பட்டை - ஒரு சிறிய துண்டு, கிராம்பு - 3, நெய் - தேவையான அளவு, கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, பால் - சிறிதளவு.
செய்முறை: பாலில் குங்குமப்பூ, கேசரிபவுடர் இரண்டையும் கரைத்துக் கொள்ளவும். அரிசியை உதிரியாக வடித்து ஆறவிடவும். கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் கிராம்பு, பட்டை, ஏலக்காய்த்தூள், திராட்சை, பருப்பு துண்டுகளைப் போட்டு வறுத்துக் கொள்ளவும். ஆற வைத்துள்ள சாதத்தை போட்டு(சாதம் உடைந்து விடாத அளவு) பாலில் ஊறிய கேசரிபவுடர், குங்குமப்பூவையும் சேர்த்து லேசாக கிளறவும். ஆறிய பிறகு சர்க்கரை சேர்த்து கலந்து பரிமாறவும்.
தேங்காய்ப் பால் புலாவ்
தேவையானவை: பாஸ்மதி அரிசி - ஒரு கப், தேங்காய்ப் பால் - இரண்டரை கப், கேரட் துருவல் - அரை கப், தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது), இஞ்சி, பூண்டு துருவல் - கால் டீஸ்பூன், பச்சைமிளகாய் - 2 (நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்), பச்சைப் பட்டாணி - கால் கப், எண்ணெய் - 4 டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, உடைத்த முந்திரி துண்டு - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: அரிசியைக் கழுவி, தண்ணீருக்குப் பதிலாக தேங்காய்ப் பால் சேர்த்து உதிரியாக வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு வறுக்கவும். இஞ்சி, பூண்டு துருவல், பச்சைமிளகாய், கேரட் துருவல், பட்டாணி சேர்த்து கிளறவும். தக்காளியைப் போட்டு மேலும் சிறிது நேரம் வதக்கவும். மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, ஆற வைத்துள்ள சாதத்தைப் போட்டு நன்றாகக் கிளறி, நெய்யில் வறுத்த முந்திரியைத் தூவி பரிமாறவும்.
ஜீரா ஃப்ரைடு ரைஸ்
தேவையானவை: அரிசி - ஒரு கப், சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன், உடைத்த முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், பிரிஞ்சி இலை - ஒரு துண்டு, தண்ணீர் - இரண்டரை கப், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், கிராம்பு, பட்டைத்தூள் - கால் டீஸ்பூன், வெங்காயம் - 2 (வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்), நெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியைக் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும். கடாயில் நெய் ஊற்றி, சூடானதும் வெங்காயத்தைப் போட்டு, மொறு மொறுவென வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். அதே கடாயில் முந்திரியை வறுத்துக் கொள்ளவும். பிறகு சீரகம், மிளகு, பிரிஞ்சி இலை, கிராம்பு, பட்டைத்தூள் சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும். அரிசியுடன், தண்ணீரை சேர்த்துக் கொதிக்கவிடவும். சாதம் 75 சதவிகிதம் வெந்ததும் சர்க்கரையைச் சேர்த்து மேலும் 2 நிமிடம் கொதிக்க விடவும். வறுத்த வெங்காயம், உப்பு, மசாலா பொருட்கள், முந்திரி சேர்த்து நன்றாகக் கொதித்ததும், தீயைக் குறைத்து தண்ணீர் வற்றும் வரை, பொல பொல வென்று சாதத்தை சமைக்கவும். சூடான வெஜ் கிரேவியுடன் பரிமாறவும்.
மாங்காய் சாதம்
தேவையானவை: அரிசி - ஒரு கப், கிளிமூக்கு மாங்காய் (பழுக்காமல், ஸ்வீட்டான மிதமான மாங்காய்) - 4 (தோல்சீவி துருவிக் கொள்ளவும்) கடுகு - 2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 3 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, காய்ந்த மிளகாய் - 3, நறுக்கிய மல்லித்தழை - கால் கப், மஞ்சள்தூள் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. அரைக்க: தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கடுகு - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: அரிசியை உதிரியாக வடித்து ஆறவிடவும். மிக்ஸியில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகைப் போட்டு, வெடித்ததும் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு வறுத்துக் கொள்ளவும். நன்றாக வறுபட்டதும், மாங்காய் துருவலை போட்டு வதக்கி, மசாலா விழுது, மஞ்சள்தூள் சேர்த்து கிளறவும். 2 நிமிடம் கழித்து சமைத்த சாதத்துடன் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். மல்லித்தழை தூவி பரிமாறவும்.
இஞ்சி-எலுமிச்சை சாதம்
தேவையானவை: இஞ்சி துருவல் - 2 டேபிள்ஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், தண்ணீர் - 2 கப், பாஸ்மதி அரிசி - ஒரு கப், எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகத்தூள், இஞ்சி துருவலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிக் கொள்ளவும். அதில் 2 கப் தண்ணீர் சேர்த்து, கொதித்ததும் அரிசியைக் கழுவிப் போட்டு, உதிரியாக வடித்துக் கொள்ளவும். சிறிது ஆறியதும் எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கிளறவும். அருமையான சுவையில் இஞ்சி எலுமிச்சை சாதம் ரெடி!
மசாலா பாத்
தேவையானவை: அரிசி - ஒரு கப், வெங்காயம் - 1, பச்சைப் பட்டாணி - அரை கப் (வேக வைக்கவும்), கேரட் - 1 (பொடியாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய கோஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, இஞ்சி துருவல் - அரை டீஸ்பூன், பூண்டு - அரை டீஸ்பூன், பச்சைமிளகாய் - 2 (துண்டுகளாக நறுக்கவும்) பொடித்த முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், திராட்சை - ஒரு டேபிள்ஸ்பூன், வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், மசாலா தூள் - ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியைக் கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும், முந்திரி, திராட்சை, வேர்க்கடலையைப் போட்டு வறுக்கவும். சீரகம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். இஞ்சி துருவல், பூண்டு, வெங்காயம் சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், மற்ற காய்கறிகளை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். மசாலா தூள், மஞ்சள்தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து ஊற வைத்துள்ள அரிசியை வடிய வைத்து, அதனுடன் சேர்த்து, சாதமாக சமைத்து சூடாகப் பரிமாறவும்.
காலிஃப்ளவர் ரைஸ்
தேவையானவை:
அரிசி - ஒன்றரை கப், காலிஃப்ளவர் - 2 கப் (உதிர்த்துக் கொள்ளவும்), சீரகம் - ஒரு டீஸ்பூன், கிராம்பு - 2, பச்சைமிளகாய் - 2, தக்காளி கெட்சப் - 2 டீஸ்பூன், மல்லித்தழை - சிறிது, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: சாதத்தை உதிரியாக வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், கிராம்பு, பச்சைமிளகாய் போட்டு வறுக்கவும். உதிர்த்து வைத்துள்ள காளிஃப்ளவரை சேர்த்து பொன்னிறமாக மாறும்வரை வதக்கவும். உப்பு, தக்காளி கெட்சப், மல்லித்தழை சேர்த்து கிளறி வடித்து வைத்துள்ள சாதத்தைப் போட்டு நன்றாகக் கலந்து சூடாகப் பரிமாறவும்.
கத்திரிக்காய் சாதம்
தேவையானவை: அரிசி - ஒரு கப், கத்திரிக்காய் - 5 (மீடியம் சைஸ்), வெங்காயம் - 3 (மீடியம் சைஸ்), தனியா - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை - கால் கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை உதிரியாக வடித்து ஆறவிடவும். வெங்காயத்தையும், கத்திரிக்காயையும் நடுத்தரமாக நறுக்கவும் (ரொம்பவும் பொடியாக நறுக்கினால் குழைந்துவிடும். சுவையும் இல்லாமல் போய்விடும்). தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும், வெங்காயத்தை வதக்கி பிறகு கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும். அரைத்த பொடியை தூவி 2 நிமிடம் கிளறவும். பிறகு, ஆறவைத்துள்ள சாதத்தை சேர்த்து லேசாக கிளறி, மல்லித்தழை தூவி பரிமாறவும்.
கொத்துமல்லி சாதம்
தேவையானவை: அரிசி - ஒரு கப், கொத்துமல்லி - ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்), பச்சைமிளகாய் - 5, சின்ன வெங்காயம் - 5 (தோலுரித்து வைக்கவும்), பூண்டு - 5 பல், இஞ்சி துருவல் - ஒரு டீஸ்பூன், தேங்காய் - ஒரு சிறிய துண்டு, பட்டை - ஒரு துண்டு, சீரகம், சோம்பு - தலா ஒரு டீஸ்பூன், பிரிஞ்சி இலை - 1 (அரிசியைத் தவிர மேலே தந்துள்ள எல்லா பொருட்களையும் சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்), சின்ன வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கவும்), பூண்டு - 3 (பொடியாக நறுக்கவும்) பட்டை, பிரிஞ்சி இலை, கிராம்பு - தலா 1, முந்திரி - 6 (உடைத்துக்கொள்ளவும்). நெய் (அ) எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியைக் கழுவி 15 நிமிடம் ஊறவைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தை முறுகலாக வறுத்து எடுக்கவும். முந்திரியை வறுத்து எடுத்து வைக்கவும். பிறகு பட்டை, பிரிஞ்சி இலை, கிராம்பு, பூண்டு, சேர்த்து வதக்கி அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து, மேலும் 2 நிமிடம் வதக்கவும். அதனுடன், 3 கப் தண்ணீர் ஊற்றி, ஊற வைத்த அரிசியை வடித்து போட்டு வேகவிடவும் (அ) குக்கரில் சமைக்கவும். சிறிது வறுத்த முந்திரியையும், வதங்கிய வெங்காயத்தையும் தூவி பரிமாறவும்.
சின்ன வெங்காய சாதம்
தேவையானவை: காய்ந்த மிளகாய் - 20 (இரண்டாக கிள்ளிக்கொள்ளவும்), கடுகு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், புளி விழுது - 2 டீஸ்பூன், அரிசி - ஒரு கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சின்ன வெங்காயம் - ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பிரஷர் குக்கரில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகைப் போடவும். வெடித்ததும், கடலைப் பருப்பு, மிளகாய்துண்டுகள், புளிவிழுது, உப்பு, மஞ்சள்தூள், அரிசி சேர்த்து 5 கப் (1:5 என்ற விகிதத்தில்) தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். உரித்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து குக்கரை மூடி 4 விசில் வரும்வரை சமைக்கவும். காரசாரமான சின்ன வெங்காய சாதம் ரெடி.
கிரீன் ரைஸ்
தேவையானவை: அரிசி - 3 கப், மல்லித்தழை - ஒரு கட்டு, கறிவேப்பிலை - சிறிது, ஏலக்காய், கிராம்பு, பட்டை - தலா 2, பூண்டு - 3 பல், இஞ்சி - ஒரு துண்டு, வெங்காயம் - 2, பச்சைமிளகாய் - 6, மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப, கரம்மசாலா தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மல்லித்தழை, கறிவேப்பிலை, பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, பாதி வெங்காயம் இவற்றை விழுதாக அரைக்கவும். மீதி வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். சாதத்தை உதிரியாக வடித்து ஆற வைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கிராம்பு, பட்டை, ஏலக்காய் போட்டு வறுத்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அரைத்த விழுதைக் கொட்டி, கரம்மசாலா தூள், மிளகாய்த்தூள் போட்டு கிளறவும். உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கியதும் ஆற வைத்துள்ள சாதத்தைப் போட்டுக் கிளறவும். அதிக நேரம் கிளற வேண்டாம். மல்லித்தழை தூவி பரிமாறவும்.
சூப்பர் டேஸ்ட்டி ரைஸ்
தேவையானவை: உதிரியாக வடித்த சாதம் - ஒரு கப், வறுத்த சீரகத்தூள் - 2 டேபிள்ஸ்பூன், தனியாத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சை சாறு - 3 டேபிள்ஸ்பூன், கரம்மசாலா தூள் - ஒன்றரை டேபிள்ஸ்பூன், பச்சைமிளகாய் - 3 (நீளவாக்கில் நறுக்கவும்), பச்சைப் பட்டாணி - கால் கப் (வேகவைத்துக் கொள்ளவும்), கறிவேப்பிலை - சிறிது, சீரகம், கடுகு - ஒரு டீஸ்பூன், மல்லித்தழை - கால் கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெயை ஊற்றி, காய்ந்ததும் கடுகு, சீரகத்தை வெடிக்க விடவும். கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பச்சைமிளகாயை சேர்க்கவும். அதில் சாதம், வேகவைத்த பட்டாணியை சேர்த்து 2 நிமிடம் கிளறவும். கரம்மசாலா தூள், தனியாத்தூள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி, சீரகத்தூள் சேர்த்து கலக்கவும். மல்லித்தழை தூவி பரிமாறவும்.
காரசார சாதம்
தேவையானவை: அரிசி - ஒரு கப், தேங்காய் துருவல் - 5 டீஸ்பூன், எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன், துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 2 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, கறிவேப்பிலை - சிறிது, பெருங்காயம், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சாதத்தை உதிரியாக வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, தேங்காய் துருவல், வடித்த சாதம், மஞ்சள்தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து 2 நிமிடம் கிளறவும். மீதி பொருட்ளை வறுத்து மிக்ஸியில் பொடி செய்து கடாயில் உள்ள சாதத்துடன் சேர்த்து ஒரு நிமிடம் லேசாக கிளறி இறக்கவும்.
சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாதம்
தேவையானவை: அரிசி - 2 கப், சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 1 (சதுரமாக நறுக்கி வேக வைத்துக் கொள்ளவும்), மல்லித்தழை - சிறிது, குடமிளகாய் - 1 (சிறிய துண்டுகளாக நறுக்கவும்), வெங்காயம் - 1, வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயம் - கால் டீஸ்பூன், சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு - இரண்டரை டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், தனியா - 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிது, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை உதிரியாக வடித்து ஆறவிடவும். தனியா, உளுத்தம் பருப்பு, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், இரண்டு டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு ஆகியவற்றை வறுத்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, அரை டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு வறுக்கவும். ஒரு நிமிடம் கழித்து வேர்க்கடலை சேர்த்து வறுக்கவும். பின்னர், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதில் குடமிளகாய் துண்டுகளைப் போட்டு வதக்கி, வேக வைத்துள்ள சக்கரைவள்ளிக்கிழங்கை சேர்த்து கிளறவும். வறுத்து அரைத்த மசாலாவைத் தூவவும். சாதம், உப்பு, சர்க்கரை சேர்த்து மல்லித்தழை தூவி பரிமாறவும்.
புரோட்டீன் புலாவ்
தேவையானவை: வெள்ளைக் கொண்டைக்கடலை, வெள்ளைப் பட்டாணி, பச்சைப் பட்டாணி, வேர்க்கடலை - தலா அரை கப், அரிசி - ஒன்றரை கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - ஒரு துண்டு, புதினா, மல்லித்தழை - கால் கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியைக் கழுவி 15 நிமிடம் ஊறவைக்கவும். பருப்புகளை முதல்நாள் இரவே ஊறவைத்து மறுநாள் குக்கரில் வேக விடவும். பச்சைமிளகாய், வெங்காயம், இஞ்சியை விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகத்தை வறுத்து, அரைத்த விழுதைப் போட்டு வதக்கவும். நன்றாக வதங்கியதும், வேகவைத்த பருப்புகளை போட்டு 2 நிமிடம் வதக்கவும். இதனுடன், ஊறவைத்த அரிசியை வடித்து உப்பு, ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து வேக விடவும். 2 விசில் வந்ததும் இறக்கி, ஆறியதும் மல்லித்தழை, புதினா தூவி பரிமாறவும்.
தக்காளி பிரியாணி
தேவையானவை: அரிசி - ஒரு கப், தக்காளி - 4, பூண்டு - 4 பல், பச்சைமிளகாய் - 4, பட்டை - 2 துண்டு, கிராம்பு - 2, சீரகம் - அரை டீஸ்பூன், ஏலக்காய் - 2, பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிது.
செய்முறை: அரிசியை உதிரியாக வடித்துக் கொள்ளவும். தக்காளியைத் தனியாகவும், பூண்டு - பச்சைமிளகாயைத் தனியாகவும் அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம், ஏலக்காய், கிராம்பு, பட்டை இவற்றுடன் பூண்டு - பச்சை மிளகாய் விழுதை சேர்த்து வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் பொன்னிறமாக வதக்கி, தக்காளி சாறை ஊற்றி உப்பு, மஞ்சள்தூள், கறிவேப்பிலை சேர்த்து, எண்ணெய் பிரியும்வரை கொதிக்க விடவும். வடித்த சாதத்தைப் போட்டுக் கிளறி மல்லித்தழை தூவி பரிமாறவும்.
பெங்காலி புலாவ்
தேவையானவை: வடித்த சாதம் - ஒரு கப், பிரிஞ்சி இலை - 1, திராட்சை - ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், கிராம்பு - 2, ஏலக்காய் - 1, பட்டை - 1, வெங்காயம் - 1, இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், பால் - ஒரு டீஸ்பூன், குங்குமப்பூ - 4 இழை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் பிரிஞ்சி இலை, கிராம்பு, ஏலக்காய், பட்டை, இஞ்சி விழுது சேர்த்து வதக்கவும். இரண்டு நிமிடம் வதங்கியதும், சாதத்தை சேர்த்து, உப்பு, சர்க்கரை போட்டுக் கிளறவும். பாலில் குங்குமப்பூவை கரைத்து, இதில் ஊற்றிக் கிளறவும். வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும். நன்றாகக் கிளறி சூடாகப் பரிமாறவும்.
கீரை-கேரட் புலாவ்
தேவையானவை: பொடியாக நறுக்கிய ஏதேனும் ஒரு கீரை - ஒரு கப், கேரட் - கால் கப் (பொடியாக நறுக்கவும்), வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), சோம்பு, நெய் - தலா ஒரு டீஸ்பூன், ஏலக்காய் - 1, கிராம்பு - 2, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய் - 2 (நீளவாக்கில் நறுக்கவும்), பட்டை - ஒரு சிறிய துண்டு, பாஸ்மதி அரிசி - ஒரு கப், உப்பு - தேவையான அளவு, மல்லித்தழை - சிறிது.
செய்முறை: அரிசியைக் களைந்து 15 நிமிடம் ஊறவைக்கவும். கடாயில் நெய்யை விட்டு, காய்ந்ததும் சோம்பு, ஏலக்காய், கிராம்பு, பச்சைமிளகாய், பட்டை சேர்த்து வறுக்கவும். பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு 2 நிமிடம் வதக்கவும். அதனுடன் நறுக்கி வைத்துள்ள கீரை, கேரட்டை சேர்த்து 2 நிமிடம் கிளறி, அரிசி, உப்பு, மிளகாய்த்தூள், இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து, குக்கரில் வைத்து சமைக்கவும். மல்லித்தழை தூவி பரிமாறவும்.
ராஜ்மா பிரியாணி
தேவையானவை: வேக வைத்த ராஜ்மா - அரை கப், சாதம் - ஒரு கப், தக்காளி - 3, பிரியாணி மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், கிராம்புத்தூள் - அரை டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், தயிர் - 5 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு வறுக்கவும். பிறகு தக்காளித் துண்டுகளைப் போட்டு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். மசாலாத்தூள், கிராம்புத்தூள், ஏலக்காய்த்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கிளறவும். 2 நிமிடம் கிளறியதும், ஒரு டேபிள்ஸ்பூன் தயிர், வெந்த ராஜ்மாவைப் போட்டு நன்றாக கிளறவும். ராஜ்மா மசாலா கிரேவி ரெடி!
பரிமாறும் விதம்: ஒரு சதுர (அ) வட்ட பாத்திரத்தில் முதலில்.. சிறிது சாதத்தைப் பரப்பி, 2 டேபிள்ஸ்பூன் தயிரை பரவலாக ஊற்றி, சிறிது பிரியாணி மசாலாத்தூளை தூவவும். அடுத்து, வேக வைத்த ராஜ்மா மசாலாவை பரப்பவும். கடைசியில் மறுபடியும் மீதமுள்ள சாதத்தை பரப்பி, 2 டேபிள்ஸ்பூன் தயிரை ஊற்றி, மீதம் உள்ள பிரியாணி மசாலாத்தூளை மேலே தூவவும். மல்லித்தழை தூவி பரிமாறவும்.
மகாராஜா புலாவ்
தேவையானவை: வடித்த சாதம் - ஒரு கப், தக்காளி ப்யூரி - அரை கப் (தண்ணீர் சேர்க்காமல் அரைத்த ஜூஸ்), இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பூண்டு - 3 பல், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், கிராம்பு - 2, வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் நெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், இஞ்சி, பூண்டு, மிளகுத்தூள், கிரம்பு போட்டு வதக்கவும். உப்பு சேர்த்து, 2 நிமிடம் கழித்து தக்காளி ப்யூரியை சேர்த்து கிளறவும். நன்றாக இறுகியதும், சாதத்தை சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கவும். சாதத்தை உதிரியாக வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, தேங்காய் துருவல், வடித்த சாதம், மஞ்சள்தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து 2 நிமிடம் கிளறவும். மீதி பொருட்ளை வறுத்து மிக்ஸியில் பொடி செய்து கடாயில் உள்ள சாதத்துடன் சேர்த்து ஒரு நிமிடம் லேசாக கிளறி இறக்கவும்.

அதிமதுரம் மருத்துவ குணங்கள் மலட்டு தன்மையை நீக்கும் பரிகாரம் 8056156496

அதிமதுரம்..!
மருத்துவ குணங்கள்..!
ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள்ளன. வேர்ப்பகுதி மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக உள்ள அதிமதுரத்தின் சக்தி, அதைப் பயன்படுத்தியவர்களுக்குத் தான் தெரியும். நீங்களும் தெரிந்து கொண்டால் தேவையான சமயத்தில் தயங்காமல் பயன்படுத்தலாமே
அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியாகியுள்ளது.
செரிமானத்திற்கும் மலச்சிக்கலுக்கும்...
அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது.
கல்லடைப்பு நீங்க...
ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்கவும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும். கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.
மலடுதன்மை நீங்கி ஆண்மை குறைவு நீங்கி நிச்சயம் குழந்தபாக்யம் பெற தொடர்புகொள்ளுங்கள் 
8056156496

இருமல் நீங்க...
அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து இளவறுப்பாய் வறுத்து, சூரணம் செய்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.
பிரசவத்திற்கு முன் வரும் உதிரப் போக்கைத் தடுக்க...
அதிமதுரம், சீரகம் சரி எடை எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்­ரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கை நிவர்த்தி செய்து விடலாம்.
மஞ்சள் காமாலை நீங்க...
அதிமதுரம், சங்கம் வேர்ப்பட்டை சமமாக எடுத்துப் பொடி செய்து எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து தேற்றாங்கொட்டை அளவு மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு, பசும்பாலில் மூன்று தினங்கள் சாப்பிட்டால், மஞ்சள் காமாலை நிவர்த்தியாகும். புளியில்லா பத்தியம் இருக்க வேண்டும்.
சுகப் பிரசவத்திற்கு...
அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.
தொண்டைக் கட்டு இருமல் சளிக்கு...
அதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு 2 கிராம் அளவில் தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால் தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும். இதைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண் தன்மை பலவீனம் நீங்கும். உடல் பலமும், ஆரோக்கியமும் விருத்தியாகும்.
பெண் மலடு நீங்க...
பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.
மலச்சிக்கல் நீங்க...
அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து இடித்துச் சலித்து வைத்துக்கொண்டு, இரவு படுக்கும் போது 6 கிராம் பாலில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது. இலகுவாக மல விருத்தியாகும்.
சூடு தணிந்து சுறுசுறுப்பாக...
சோம்புச்சூரணம், அதிமதுரச் சூரணம் தலா 5 கிராம் அளவில் இரவு படுக்கும்போது சாப்பிட்டு சுடு தண்­ர் சாப்பிட்டால், இலகுவாக மல விருத்தியாகும். உள் உறுப்புக்கள் சூடுதணிந்து, சுறுசுறுப்பாக உடல் இயங்கச் செய்யும்.
ரத்த வாந்தி நிற்க...
அதிமதுரச் சூரணம் கலப்படம் இல்லாத சந்தனச் சூரணம் வகைக்கு அரை கிராம் எடுத்து பாலில் கலந்து 4 வேளை சாப்பிட்டால், வாந்தியுடன் இரத்தம் வருதல் நிற்கும்... உடலில் உள் உறுப்பு ரணங்கள் ஆறிவிடும்.
தாய்ப்பால் பெருக....
போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து கிடைக்கும்.
வரட்டு இருமல் நீங்க...
அதிமதுரம், வாதுமைப் பிசின், வேலம் பிசின் சமமாக வகைக்கு 10 கிராம் அளவில் சேகரித்து வைத்துக் கொண்டு, 250 கிராம் சர்க்கரையைத் தண்­ர் சிறிதளவு விட்டு பாகு பதம் வரும்வரை காய்ச்ச வேண்டும். தேன் பதம் வரும்போது மேற்கண்ட சூரணங்களைக் கொட்டிக் கிண்டி லேகியம் தயாரித்து வைத்துக் கொண்டு, இரண்டு தேக்கரண்டியளவு மூன்று முறை சாப்பிட்டால், வரட்டு இருமல் தீரும். கோழையுடன் உள்ள இருமலும் தீரும். தொண்டைப் புண் ரணங்கள் விரைவில் ஆறிவிடும்.
இளநரை நீக்க...
அதிமதுரத்தை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளநரை ஏற்படாமல் தடுக்கும். தலை மயிர் உதிர்தல் இருக்காது.
நெஞ்சுச் சளி நீங்க....
அதிமதுரம், அரிசித்திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் தலா பத்து கிராம் அளவில் சேகரித்து வைத்துக்கொண்டு, இதில் முசுமுசுக்கை இலை பத்து கிராம். ஆடா தொடை இலை பத்து கிராம், இவைகளை 200 மில்லி தண்­ரில் விட்டுக் காய்ச்சி 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி, காலை, இரவு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், நெஞ்சுச் சளியும் அனைத்து வகைச் சளிகளும் வெளியாகும். இருமல் நின்று விடும். ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்த நிவாரணமாகும். இம்முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருக, சளித்தொல்லை நீங்கும்.
இருமல் நீங்க...
அதிமதுரம், வால்மிளகு, சித்தரத்தை, திப்பிலி ஆகியவை வகைக்கு 5 கிராம் எடுத்து சன்னமாகப் பொடித்து 250 மில்லி கொதிக்கும் நீரில் போட்டு மூடி 30 நிமிஷங்கள் சென்றபின் வடிகட்டி காலை, மாலை இருவேளை 30 மில்லி வீதம் சாப்பிட்டால் இருமல் தீரும்..
மஞ்சள்காமாலை தீர...
அதிமதுரம் 15 கிராம், சீரகம் 15 கிராம், வெங்காயம் 20 கிராம், சங்கம் வேர்ப்பட்டை 15 கிராம் இவைகளை பசும்பால் தெளித்து நன்றாக அரைத்து காலை வேளையில் மூன்று தினங்கள் மட்டும் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை தீரும். மூன்று தினங்களுக்கும் ஆகாரத்தில் உப்பு, புளி சேர்க்காமல் பத்தியம் இருக்க வேண்டும்.
தாது விருத்திக்கு...
அதிமதுரத்தை நன்கு பொடித்து பாலில் கலக்கி சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாது விருத்தி உண்டாகும். போக சக்தி அதிகரிக்கும். போக சக்தியை இழந்த வாலிபர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் சிறந்த மூலிகையாகும்.
கருத்தரிக்க உதவும்...
அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 100 கிராம் எடுத்து தண்­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
வழுக்கை நீங்கி முடி வளர ....
அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும் மயிர் முளைக்கும். தலையில் உள்ள பொட்டு, பொடுகு, சுண்டு முதலியவை நீங்க, இதைப் பயன்படுத்துவதால் மேற்கண்ட குறைகள் நிவர்த்தியாகும்.
தலைவலிகள் நீக்க...
அதிமதுரம், சோம்பு, சர்க்கரை இவைகளை வகைக்கு 35 கிராம் எடுத்து, தனித்தனியாக நன்கு சூரணம் செய்து, பின் ஒன்று கூட்டி வைத்துக் கொண்டு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், உடல் சூட்டினால் ஏற்பட்ட தலைவலி நீங்கும். இதையே தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொடர்ந்து தொல்லை கொடுக்கும் தலைவலி, தீராத தலைவலி, ஒற்றைத் தலைவலி தீரும். அதிமதுரம், கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இவைகளை சம எடையாக எடுத்துச் சூரணம் செய்து அரைத் தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சீதளத்தால் ஏற்பட்ட தலைவலி தீரும். இதே சூரணத்தை நெய்யில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் அதிக வெப்பத்தால் ஏற்பட்ட தலைவலி நீங்கும்.
தொண்டை கரகரப்பு நீங்க...
அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும்... தொண்டையில் உள்ள சளிக் கட்டு கரைந்து விடும்.
ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த...
பொதுப்பிரயோகமாக அதிமதுரச் சூரணத்தை தினசரி ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்தலாம். சளி, இருமல் இருக்காது. தொண்டை சம்பந்தப்பட்ட தொல்லைகளும் நீங்கிவிடும்.

Saturday 30 May 2015

உட‌ம்பு இளை‌க்க இ‌ஞ்‌‌சி சாறு

உட‌ம்பு இளை‌க்க இ‌ஞ்‌‌சி சாறு
இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.
இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.
காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.
பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.

உண்மையில் உடல் இளைக்க வேண்டுமா? உடல் இளைப்பதற்கென்றே பிரத்யேக மையம்